fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திகன கலவரம் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 12:36

திகன கலவரம் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

கண்டி – திகன சம்பவம் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை கடந்த மே மாதம் 9 ம் திகதி முதல் 12 ம் திகதி வரை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டிருந்தது. ஆணைக்குழுவின் தலைவி மற்றும் ஆணையளர்கள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பொதுமக்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதும் அதனை வெளியிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டி திகன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மஹசோன் பலகாய இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க