யாழ்பாணத்தில் இருந்து திருமலைக்கு கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலையை நோக்கி சென்ற பஸ் வண்டியை ஓமந்தை பகுதியில் வைத்து சோதனை செய்த சுமார் 1600 போதை மாத்திரைகளை பொலிசார் மீட்டதுடன், இரண்டு சந்தேகநபர்களையும் பொலிசார் கைது செய்தனர். வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இருந்து கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்