Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 15:01

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரநிதிகளுக்கும் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, றிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரித்தாலும் எரிவாயு உட்பட நுகர்வு பொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரிக்க இடமளிக்காது எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதன்போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உதவியும் ஒத்துழைப்பும் எமக்கு மிகவும் முக்கியமானது. நுகர்வோரை பாதுகாப்பதற்கே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம் என தெரிவித்தார். சமையல் எரிபொருட்களின் விலைச்சூததிரத்திற்கு இரண்டு தரப்பினரும் ஏற்கனவே இணங்கியிருந்த போதும் போக்குவரத்தும் மற்றும் இதர செலவுகள் காலத்திற்கு காலம் அதிகரிப்பதால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் அமைச்சர்களிடம் அழுத்தமாக தெரிவித்தனர். 2007ம் ஆண்டு முதல் டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயுவை பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவும் படிப்படியாக அதிகரித்து விட்டது. இவ்விலை அதிகரிப்பினால் தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு மூட வேண்டிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதன்போது லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் விலைச்சூத்திரம் தொடர்பான முன்மொழிவொன்றை அமைச்சரிடம் கையளித்தனர். அதனை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பித்து இது தொடர்பாக பரிசீலனை செய்வோம் என உறுதியளித்தார்.

இலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகித்து வரும் இரண்டு கம்பனிகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்படுகின்ற விலை முறைகளை பின்பற்றுவதால் அவ்விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியை பெற்று கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 15:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar177.33181.30
USA
Pound222.73230.08
UK
Euro200.33207.48
EU
Yen1.551.61
Japan
Yuan25.4826.71
China
Dollar126.86132.29
Australia
CountryCurrencyRate
Dinar476.09
Dinar590.25
Riyal466.09
Riyal49.28
Riyal47.83
Dirham48.85