fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கெமரோஸ் இராச்சியத்தில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக இராணுவத்தினர்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 13:27

கெமரோஸ் இராச்சியத்தில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக இராணுவத்தினர்

கெமரோஸ் இராச்சியத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கென மேலதிக இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்குமிடையில் நான்காவது நாளாகவும் மோதல் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்த்தரப்பினர், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டதையடுத்து, மோதல் நிலை உருவாகியுள்ளது. இதன்போது பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையிலேயே பாதுகாப்பு பணிகளுக்கென மேலதிக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெமரோஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 13:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க