Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுவசெரிய இலவச எம்ப்யூலன்ஸ் சேவை வடமேல் மாகாணத்தில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 11:59

சுவசெரிய இலவச எம்ப்யூலன்ஸ் சேவை வடமேல் மாகாணத்தில் ஆரம்பம்

1990 என்ற சுவசெரிய இலவச எம்ப்யூலன்ஸ் சேவை இன்று முதல் வடமேல் மாகாணத்தில் இயங்கவுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் முயற்சியின் காரணமாக வட மாகாணத்தில் இலவச எம்ப்யூலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1990 என்ற சுவசெரிய எம்ப்யூலன்ஸ் சேவை கடந்த 2016ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வருடம் ஜுலை மாதம் வட மாகாணத்திலும், ஓகஸ்ட் மாதம் ஊவா மாகாணத்திலும், செப்டெம்பர் மாதம் வடமத்திய மாகாணத்திலும் 1990 என்ற சுவசெரிய எம்ப்யூலன்ஸ் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இதுவரை திடீர் சுகவீனங்களின்போது அவசர சிகிச்சைகள் தேவைப்பட்ட ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 11:59
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க