fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறைச்சாலை பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 14:29

சிறைச்சாலை பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படை

சிறைச்சாலை பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் சிறைக்கைதிகள் அதிகமுள்ள சிறைச்சாலைகளில் 200 அதிரடிப்படையினரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 100 அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். முறைகேடுகள் இடம்பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கமைய அண்மையில் சிறைச்சாலையின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டது. இதன்பின்னரே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 14:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க