fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2018 10:19

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று

நாடளாவிய ரீதியிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. நவம்பர் மாதம் 10ம் திகதி வரை நேர்முகப்பரீட்சை இடம்பெறுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு தகுதிவாய்ந்த அதிபர்களை பதவிதர அடிப்படையில் நியமிக்கவேண்டியதன் தேவை உணரப்பட்டுள்ளது. இதேவேளை 8 வருட காலத்திற்கு மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் அதிபர்களை ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்ற, அரசசேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2018 10:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க