Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக வங்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 16:38

உலக வங்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை

வர்த்தகப்போரின் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு உலக வங்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் என்பவற்றுக்கிடையிலான வருடாந்த உச்சி மாநாடு இந்தோனேசியாவில் இடம்பெற்றது. இம்மாநாட்டின் போது வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த எச்சரிகையை உலக வங்கி விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடுகளுக்கிடையில் வர்த்தகப்போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றன. இதன் விளைவாக குறிப்பிட்ட நாடுகள் பாதிக்கப்படுவதோடு, அந் நாடுகளைச் சார்ந்துள்ள நாடுகளும் பாதிக்கப்படுவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வர்த்தகப் போரில் ஈடுபட்டுவரும் நாடுகள் மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமென உலக வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பயணிப்பதன் மூலம் அனைத்து நாடுகளையும் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லமுடியுமென உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உலகின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3.7 ஆக காணப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி வீதம் 3.9 ஆக காணப்பட்டபோதிலும் அதனை எட்டமுடியவில்லையென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போரே இந்நிலைக்கு காரணமென உலக வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை மாநாட்டின் இறுதியில் பன்னாட்டு நிதியத்தின் உறுப்பு நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, பண மதிப்பை குறைத்துக்கொள்ளமாலிருக்க உறுதி மொழி எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 16:38
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க