fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொது சுகாதார பரிசோதகர்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு வசதிகள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 16:07

பொது சுகாதார பரிசோதகர்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு வசதிகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ருஹுணு பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென அடுத்த வருடம் நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பட்டதாரி தாதியர்களை உருவாக்குவதற்கென சர்வதேச மட்டத்திலாக தாதியர் கல்லூரியொன்றை நிர்மாணிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கென 18 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதேவேளை பொது சுகாதார பரிசோதகர்களுக்கான பயிற்சி காலத்தை இரண்டு வருடம் வரை அதிகரிப்பதற்கான சுற்றுநிரூபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 16:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க