தேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..
Related Articles
இலங்கையின் முதலாவது அரசியல் சார்ந்த திரைப்படமான தேச பிதா திரைப்படம் இன்று யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக முதலாவது பிரதமரான டி.எஸ் சேனநாயக்கவை மையமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ செப்டம்பர் எனும் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை பிரபல இயக்குனரான சுனில் லொக்கு ஹேவ இயக்கியிருப்பதுடன் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் இதில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திரைப்பட காட்சியை யாழ் மாகாண முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆரம்பித்து வைத்தார். பெரும்hபலான பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் களைஞர்கள் என பலரும் பார்வையிட்டனர்.
இதேவேளை சிங்கள மொழியிலான இத்திரைப்படத்தின் முதலாவது காட்சி கொழும்பு ரீகல் திரையரங்கில் நிதஹாசே பியா டீ எஸ் எனும் பெயரில் திரையிடப்பட்டது. இலங்கையின் சுதந்திரத்திற்காக முன்னின்று பாடுபட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ் சேனநாயக்கவின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஐரிஎன் ஊடக வலையமைப்பு பிரதான அனுசரணையை வழங்கி வருகிறது. படத்தின் இணை தயாரிப்பாளரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நிறைவேற்று தயாரிப்பாளர் நிரோஷன் பாதுக்க திரைப்படத்தின் இயக்குனரான சுனித் மாலிங்க லொக்கு ஹேவா மற்றும் மேல் மாகாண முதல் அமைச்சர் இசுறு தேவ பிரிய ஆகியோர் திரைப்படத்தின் முதலாவது காட்சிக்கு வருகை தந்தனர்.