கொழும்பு வெள்ளத்தை கட்டுப்படுத்த அமைச்சரவை பத்திரம்
Related Articles
களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் வெள்ள நீரை கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. வெள்ளநீரை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுப்பதற்கு முன்வைக்கப்பட்ட திட்ட அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கடந்த 2008ம், 2009ம் மற்றும் 2016ம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய உரிய நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுளளார். திட்ட அறிக்கையை அமைச்சரவையின் அனுமதிக்கென சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.