fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீருடை வவுச்சர்களின் பெறுமதி அதிகரிப்பு : 3 வாரங்களில் மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 15:24

சீருடை வவுச்சர்களின் பெறுமதி அதிகரிப்பு : 3 வாரங்களில் மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கான வவுச்சரின் பணப்பெறுமதியை அதிகரிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. மாணவர்களின் சீருடைக்கு தேவைப்படும் துணிகளின் பெறுமதியை கருத்திற்கொண்டு பணப்பெறுமதி அதிகரிக்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன தெரிவித்துள்ளார். இதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விலைகள் ஆராயப்பட்டு புதிய சீருடைக்கான வவுச்சர்களை அச்சிடுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 15:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க