Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 14:58

உள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு

உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிப்பதனூடாக அரசாங்கத்துக்கு வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாவை மீதப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தியின் இரண்டாம் கட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. நேற்றைய உற்பத்தி திறன் இரண்டு பில்லியனாகும். எதிர்காலத்தில் தயாரிப்புக்களை மேலும் அதிகரிப்பதனூடாக மருந்து இறக்குமதியை குறிப்பிடத்தக்களவு குறைக்க முடியும்.

இதேவேளை குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பிலும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெளிவுப்படுத்தினார். புதிய மருந்து தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் உற்பத்தி இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதனூடாக வருமானம் அதிகரிக்கும். 2020 ம் ஆண்டளவில் குடும்பநல சுகாதார அதிகாரி ஒருவரின் அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் 10 ஆயிரத்தால் அதிகரிக்கும் போது முழுச்சம்பளம் 25 ஆயிரத்தால் அதிகரிக்கும். மேலதிக நேர கொடுப்பனவு அதிகரித்துள்ளது. ஏனைய கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் 39 பேருக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 14:58
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar177.33181.30
USA
Pound222.73230.08
UK
Euro200.33207.48
EU
Yen1.551.61
Japan
Yuan25.4826.71
China
Dollar126.86132.29
Australia
CountryCurrencyRate
Dinar476.09
Dinar590.25
Riyal466.09
Riyal49.28
Riyal47.83
Dirham48.85