fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீற்றர் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 13:14

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீற்றர் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பல பாகங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றர் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க