பிரதம நீதியரசரை தெரிவுசெய்ய அரசியல் யாப்பு சபை கூடல்..
Related Articles
அரசியல் யாப்பு சபை கூடியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், சிவில் சமூகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூவரும் அரசியல் யாப்பு சபையில் அங்கம் வகிக்கின்றனர். பேராசிரியர் ஜயனாத் தனபால, ஜாவிட் யூசுப் மற்றும் என்.செல்வகுமரன் ஆகியோர் அரசியல் யாப்பு சபைக்கு சிவில் சமூகம் சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசியல் யாப்பு சபை கூடியுள்ளது. இன்றைய தினம் புதிய பிரதம நீதியரசரை தெரிவுசெய்வது தொடர்பில் அரசியல் யாப்பு சபை கவனம் செலுத்துமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசராக பதவி வகித்த பிரியசாத் டெப்பின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கமைய இன்றைய தினம் புதிய பிரதம நீதியரசர் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment