fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:53

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ஒருதொகை போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை, பொன்னாலை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளொன்றில் போலி நாணயத்தாள்களை எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட மடிகணனி மற்றும் அச்சு இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க