சிறுபோக நெற் கொள்வனவு வெற்றிகரமாக நடைபெறுகிறது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:45

சிறுபோக நெற் கொள்வனவு வெற்றிகரமாக நடைபெறுகிறது

சிறுபோகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செயய்வதற்காக அரசாங்கம் 984 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது. அறுவடையை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இம்முறையும் கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளது. கொள்வனவு செய்யப்படுகின்ற நெல்லை களஞ்சியப்படுத்துவதற்காக நெற் சந்தைப்படுத்தும் சபையினால் 28 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:45

Default