fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:32

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திற்கும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கடந்த நாட்களுடன் ஒப்பிடும் போது மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினத்தை நோக்கினால் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒருசில பகுதிகளில் 75 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களை நோக்கினால் குறிப்பாக பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வட கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சியில் ஓரளவு குறைவு ஏற்படக்கூடும். ஆனால் ஏனைய மாகாணங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க