fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் இன்று தேர்ந்தெடுப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:32

ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் இன்று தேர்ந்தெடுப்பு

ஐநா மனித உரிமை பேரவைக்கு 193 நாடுகளில் இருந்து புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர். ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் இந்தியா இதற்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஐநாவின் மனித உரிமை பேரவைக்கு தேர்ந்தெடுப்பதற்கென குறைந்தபட்சம் 97 நாடுகளின் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு இரகசிய வாக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளது.

இன்று தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குள் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களாக செயற்படுவர். இந்தியாவுடன் பஹ்ரைன், பங்களாதேஷ், புஃஜி மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்புரிமையை பெற்று கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது. 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலும் 2014 முதல் 2017 வரையான காலப்பகுதியிலும் இந்தியா இப்பேரவையின் உறுப்புரிமையை பெற்று கொண்டது. 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய உறுப்பினர்கள் இப்பேரவையின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளனர். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை பேரவையில் 13 ஆசனங்கள் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு கிடைக்கின்றது. இதற்கு மேலதிகமாக ஆபிரிக்க நாடுகளுக்கு 13 ஆசனங்களும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆறு ஆசனங்களும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆசனங்களுக்கு எட்டு ஆசனங்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏழு ஆசனங்களுமாக இப்பேரவையில் உறுப்புரிமை கிடைக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க