பெசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு
Related Articles
மல்வானை இடம்குறித்து முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை நவம்பர் 14ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரிப்பதற்கு தீலர்மானிக்கப்பட்டது. கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
மல்வானை பகுதியில் 17 ஏக்கர் காணியொன்றை கொள்வனவு செய்து அதி சொகுசு மாளிகையொன்றை நிர்மாணித்தமையின் மூலம் 203 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக பெசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடஷேன் ஆகிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. பண மோசடி சட்டத்தின் கீழ் இவ்வழக்கை நிதி குற்றவியல் பிரிவு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு நவம்பர் மாதம் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.