fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 12:41

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து வருகைத்தந்த அவர்கள் தங்களது பயணப்பைகளில் பல்வேறு பொருட்களை எடுத்துவந்து, விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் வத்தளை, கண்டி மற்றும் கோட்டை பகுதியை சேர்ந்த 46 மற்றும் 56 வயதுக்கிடைப்பட்டவர்களென விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 24 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 65 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க