fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழில்பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 12:38

தொழில்பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

வெளிநாட்டில் தொழில்பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட 40 வயதான நபரொருவர் பாணந்துறையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 5 கோடி ரூபா பணத்தை பெற்று மோசடி செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பாணந்துரை சட்ட அமுலாக்க பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை, பண்டாரகம், மத்துகம, களுத்துறை, எல்ப்பிட்டிய, மாத்தறை மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களிடமே அவர் பணத்தை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர் வாடகைக்கு வாகனங்களை பெற்று, திருப்பி கொடுக்காது மோசடியில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 4 மோட்டார் கார்கள் மற்றும் ஜுப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை இன்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க