Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் விலை எல்லை மீறினால் அதன் சுமையை அரசு பொறுப்பேற்கும் : நிதியமைச்சர்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 16:47

எரிபொருள் விலை எல்லை மீறினால் அதன் சுமையை அரசு பொறுப்பேற்கும் : நிதியமைச்சர்

எரிபொருள் விலை எல்லைமீறி சென்றால் மக்களின் நலன்கருதி அதன் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்குமென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்ட நாட்டையே தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றது. அரச வருமானமும் 11.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. 2014ம் ஆண்டு வருமானத்திற்கும், செலவிற்குமிடையிலான இடைவெளி 601 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெற்றோல் விலை குறையும்போது, உள்நாட்டிலும் விலை குறைக்கப்படும். தற்போது சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனினும் எரிபொருள் விலை எல்லை மீறி சென்றால் உணர்வுபூர்வமான அரசாங்கம் என்ற அடிப்படையில், அதன் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்குமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை பிரதி மாதந்தோறும் 10ம் திகதி விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும். இன்றைய தினமும் எரிபொருள் விலையை தீர்மானிப்பதற்கான குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 16:47
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க