fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 16:36

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இடைக்கிடையே பெய்துவரும் மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் சாத்தியமுள்ளது. இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டுமென பொது சுகாதார விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தொடர்ச்சியான மழையினால் நோயின் தாக்கம் அதிகரிக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்தி, நுளம்பு பெருகாத வண்ணம் வைத்துக்கொள்ளவேண்டும். இதனூடாக டெங்கு நோய் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த முடியுமென பொது சுகாதார விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 16:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க