fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 15:36

யாழில் வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் இரு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தை மூடிய நிலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணம் மாணிப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் நேற்று பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டனர். முறைப்பாட்டின் அடிப்படையில் 21 வீடுகள் சோதனையிடப்பட்டன. போக்குவரத்து விதிகளை மீறிய 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க