ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி இரு வாரங்களுக்குள் நியமிக்கப்படுவாரென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிக்கி ஹேலி ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த இரு வருட காலமாக குறித்த பதவி வகித்த நிக்கி ஹேலி நேற்று தனது இராஜினாமாவை அறிவித்திருந்தார். எனினும் இதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. இதேவேளை 2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் நிக்கி ஹேலி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி பதவியை அவர் இராஜினாமா செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 46 வயதான நிக்கி ஹேலி தென் கெரோலினா மாநிலத்தின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி இராஜினாமா
படிக்க 1 நிமிடங்கள்