fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 18:51

முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை

நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடரின் முதலாவது போட்டி இன்று ரங்கிரி தம்பள்ளை மைதானத்தில் பகலிரவு போட்டியாக ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஒயின் மோகன் 14 ஓட்டங்களையும் பெற்று தொடர்ந்தும் களத்திலுள்ளனர்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 18:51

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க