fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய வானிலை அறிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 11:12

இன்றைய வானிலை அறிக்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ‘“TITLI”’ என்ற சூறாவளிக் காற்றானது 2018 ஒக்டோபர் 09ஆம் திகதி 2330 மணித்தியாலத்தின் போது வட அகலாங்கு 15.50 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 86.00களுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.

இத்தொகுதியானது திருகோணமலைக்கு 1000 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதுடன் வடமேற்கு திசையில் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை முதல் சிறிது குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

மேற்கு, மத்திய, தெற்கு , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

 

இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 11:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க