கோட்டாபயவுக்கெதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு
Related Articles
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலையை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபாவை அரசாங்க நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆவணங்கள் எதிர்தரப்பினருக்;கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பிரதிவாதிகள் விசேடமாக கோரியுள்ள ஆவணங்களையும் எதிர்காலத்தில் பெற்றுத்தருவதாக சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைய இவ் ஆவணங்கள் பிரதிவாதிகளுக்கு கிடைத்துள்ளதா இல்லையா என்பதை கண்டறிவதற்கென இவ்வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கோட்டாபய ராஜபக்ஷ ஹர்சான் டி சில்வா, பத்ரா உதுலாவத்தி, கேமிந்த ஆட்டிகல, எப்ரஹாம் கலபதி, மகிந்த சாகல மற்றும் மல்லிகா குமாரி சோனதீர ஆகியோர் பிரதிவாதிகளாவர். பிணையிலுள்ள இந்த சகல பிரதிவாதிகளும் விசேட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர். பாரியளவிலான நிதி ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 வது வழக்கு இதுவாகும். பொதுச் சொத்து சட்டமூலம் மற்றும் குற்றவியல்சட்டவிதிமுறைகளின் கீழ் நம்பிக்கையிழப்பு, சூழ்ச்சி மற்றும் அதற்கு துணைபோகுதல், போன்ற 7 குற்றங்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக அதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஆவணங்கள் உள்ளிட்;ட 105 வழக்குடன் தொடர்புடைய தடயங்கள் மற்றும் கணக்காய்வு அறிக்கை என்பன சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 80 சாட்சியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment