fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எமது காலத்தில் 3 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம்-அமைச்சர் அகில

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 12:52

எமது காலத்தில் 3 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம்-அமைச்சர் அகில

கல்வியல் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க போவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

புதிதாக கல்வியியற் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 2 கல்வியியற் கல்லூரிகள் நிர்மாணிக்கப்படுகின்றது. ஒரே தடவையில் கல்வியியற் கல்லூரிகளுக்கு 2 குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும். எமது காலத்தில் கல்வியியற் கல்லூரிகளுக்கு 3 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.அடுத்த வருடமளவில் இது 8 ஆயிரமாக உயர்த்தப்படும். 2 குழுக்களாக கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர். அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பற்றாக்குறையை முற்று முழுதாக நிவர்த்தி செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

காலி மீபாவல அமரசூரிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ரிச்சர்ட் பத்திரன ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் மற்றும் ஏனைய கட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன. பாடசாலையி;ல் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு அமைச்சரின் தலைமையில் பிரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க