பூகோள வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் தாம் இறுதி எச்சரிக்கை விடுப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை அதிகரிப்பை ஒன்றரை பாகை செல்சியசை விடவும் குறைந்த மட்டத்தில் பேணுவது பற்றி முக்கியமானதொரு அறிக்கை வரையப்பட்டுள்ளது.
இந்த இலக்கைப் பொறுத்த வரையில் உலகம் தடம் மாறிச் சென்று வெப்பநிலை மூன்று பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் திசை நோக்கி நகர்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்று வருட காலம் நீடித்த ஆராய்ச்சிக்கும், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இடையிலான வாக்குவாதத்திற்கும் மத்தியில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை சுவாத்திய மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழு என்ற அமைப்பு வரைந்துள்ளது.