fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2019ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:36

2019ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்..

2019ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் அமைச்சர் மங்கல சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கமைய அடுத்த வருடத்திற்கான முழு அரச செலவீனம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருட வரவு செலவு திட்ட பற்றாக்குறையாக 644 பில்லியன் ரூபா காணப்படுவதுடன் அது மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 4.4 வீதமென நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 2014ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 11.5 வீதமாக காணப்பட்ட அரச வருமானம் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2019ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கமைய இம்முறை 306 பில்லியன் ரூபா நிதி பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க