கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
இது இரண்டு தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும்.
இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் பத்து இலட்சத்து 73 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இத் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகளையில் 11 தசம் 6 சதவீத அதிகரிப்பாகும்.
சீனா, இந்திய, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.