fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இண்டபோலின் தலைவரை காணவில்லை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:41

இண்டபோலின் தலைவரை காணவில்லை

சீனாவில் சர்வதேச பொலிஸான இன்டர்போலின் தலைவர் காணாமல் போனமை தொடர்பில் சீன அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் பிரான்ஸிலிருந்து தனது தாயகமான சீனாவுக்கு வருகை தந்த இன்டர்போலின் தலைவர் மென்ங் ஹொங்வே மாயமானார். சீன அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையின் படி மென்ங் கைது செய்யப்பட்டதாகவோ அல்ல அவர் சீனாவில் இருப்பதாகவோ நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் அவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மாத்திரம் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. மென்ங் மாயமானமை தொடர்பில் அவரது மனைவியான திருமதி கிரேஸ் கடந்த வியாழன் அன்று பிரான்ஸ்pன் லியோன் நகரிலுள்ள பொலிஸாருக்கு முறையிட்டிருந்தார். தனது கணவரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வரும் வரை காத்திருக்குமாறு வட்ஸ் அப் மூலம் தகவல் ஒன்று அனுப்பியதாக கிரேஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்டர்போல் மென்ங் அவசர காரணத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. தற்போது தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜொங் யெங் சர்வதேச பொலிஸின் சிரேஷ்ட பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்ங் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இன்டர் போலின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க