fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்-அமைச்சர் மஹிந்த

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:24

சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்-அமைச்சர் மஹிந்த

கடந்தாண்டு 60 ஆயிரம் மெட்ரிக் தொன் பழ வகைகளையும் 703 மில்லியன் ரூபா பெறுமதியான நிலக்கடலையையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தென்மராச்சி கற்பீளி கிராமத்தில் ஐந்து வருடத்திற்கான மாம்பழ வலயத்தினை அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களையும் உற்பத்தி செய்து சிறந்த முறையில் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் எண்ணமாகும். பழ வகைகளையும் தானியங்களையும் வடமாகாணத்தில் உற்பத்தி செய்து இலங்கையில் இருந்து செல்லும் அந்நிய செலாவணியை குறைக்க முடியும். தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் விவசாய முறையிலான உற்பத்திகளை சிறந்த வருமானத்தை பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். உர மானியமாக 35 மில்லியன் ரூபாவும், விவசாய காப்புறுதிக்காக ஐயாயிரம் மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க