fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:18

பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை

மழையினால் பாதிக்கப்பட்ட தம்புள்ளை பகுதி பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடை மழை காரணமாக தம்புள்ளை பகுதியில் பெரிய வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய துறை அமைச்சர் விவசாய மற்றும் கமநல பாதுகாப்பு சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சரின் முயற்சியில் 6 பிரதான பயிர் வகைகளுக்கு இலவச காப்புறுதி திட்டம் ஒன்று இவ்வருட பெரும்போகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரகாரம், நெல், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் , உருளை கிழங்கு, சோளம், சோயா அவறை பயிர்ச் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டயர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 228 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க