fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற காலநிலை : அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 14:27

சீரற்ற காலநிலை : அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணிக்க வேண்டாமென வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல், குருந்துகஹஹெதெக்ம பகுதி வரை பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகனங்களின் முன்பக்க விளக்குகறை ஒளிரவிட்ட வண்ணம் பயணிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்களுக்கிடையிலான இடைவெளியை சரியாக பேணி போக்குவரத்தில் ஈடுபடுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க