Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயுத பரிமாற்றல்களுக்கு ரஷ்யாவும் இந்தியாவும் இணக்கம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 13:56

ஆயுத பரிமாற்றல்களுக்கு ரஷ்யாவும் இந்தியாவும் இணக்கம்

பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்துள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி இந்தியா சென்றடைந்தார். இதன்போது ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த பாதுகாப்பு கொடுக்கல் வாங்கலுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டது. விளாடிமிர் புட்டின் அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொள்ளாது இவ்வாயுத கொடுக்கல் வாங்கல்களுக்கு முன்வந்துள்ளதாக அந்நாட்டு அறிக்;கைகள் தெரிவித்துள்ளன. இவ்வுத்தியோகபூர்வ சந்திப்பின் போது பாதுகாப்பு பிரிவு, அணுசக்தி, விண்வெளி ஆய்வு மற்றும் பொருளாதாரம் தொடர்பான சுமார் இருபது இருதரப்பு உடன்டிக்கைகளில் கைச்சாத்திடப்படவுள்ளது. அமெரிக்கா-ரஷ்யா பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறையுடன் வர்த்தகத்தை மேற்கொள்கின்ற எந்தவொரு நாட்டுக்கும் தடைகளை விதித்த போதும் எஸ்.400 விமான பாதுகாப்பு தொகுதிக்கான ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 13:56
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க