fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 10:15

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்  வெளியீடு

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின. 199 புள்ளிகளை பெற்று இரு மாணவர்கள் முதலாம் இடத்தை பிடித்துள்ளனர். பிலியந்தலை சோமவீர சந்ரஸ்ரீ வித்தியாலயத்தின் பூமித் மெத்னூல் விதானகே மற்றும் வேயன்கொடை புனித மரியாள் மகா வித்தியாலத்தின் சனூப தீமத் பெரேரா ஆகிய இரு மாணவர்களுமே இவ்வாறு முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று மூன்று மாணவர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இதில் மினுவன்கொடை ரெஜி ரணதுங்க ஆரம்ப பாடசாலையின் செனுஜி ஹகித்மா ஹெட்டியாராச்சி என்ற மாணவியும், யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் சாவக்கச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் நவஸ்கன் நாத்தி ஆகிய மூவரும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளனர். வவுனியா நெலுக்குளம் சிவப்புரம் ஆரம்ப பாடசாலையின் பாலகுமார் ஹர்த்திக்கன் சுஜா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் 196 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை திணைக்களத்தின் றறற.னழநெவள .டம இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

 

இதேவேளை புலமைப்பரிசில் பரிட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ம.திகழொளிபவன் 198 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார். புள்ளிகளின் அடிப்படையில் இவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மொழி மூலம் முதல் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 10:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க