fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது யார் ?

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 16:27

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது யார் ?

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது யார் என்பது தொடர்பில் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. சமூகத்திற்காக பாரிய தொண்டாற்றியவர்களுக்காக ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இயற்பியல், மருத்துவம், வேதியியல் ஆகியவற்றிற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விபரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைத்திக்கான நோபல் பரிசு குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. பரிசை யார் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பதில் உலகளாவிய ரீதியில் பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சித்தமைக்காக இந்த பரிசு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படலாமென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் போரிஸ் ஜோன்சன் மற்றும் தென்கொரிய தலைவர் முன் ஜே இன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அமைதிக்கான ஒரு அடையாளமாக நடத்தியமைக்காக அமைதிக்கான நோபல் பரிசானது தென்கொரிய தலைவர் முன் ஜே இன்னுக்கு வழங்கப்படவேண்டுமென சர்வதேச அமைதிக்கான ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச ரீதியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜ் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பாலியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டு தப்பி வந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா மூரத் ஆகியோரின் பெயரும் இம்முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 16:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க