fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 16:08

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்களை போன்று, பெற்றோர்களுக்கும் பாரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது. தமது பிள்ளைகளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச்செய்வதற்காக பெற்றோர் அதிக சிரத்தைகளை எடுக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் பெற்றோரின் செயற்பாடுகள் பிள்ளைகளுக்கு அழுத்தங்களாக அமைவதுடன், அவர்களது சிறு பராயத்தையும் பாதிக்கிறது.

இதேவேளை பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்ததும் சில பெற்றோர்கள் நடந்துகொள்ளும் விதம் மாணவர்களை பெரிதளவு பாதிப்பதாக பிரபல உளவள ஆலோசகரும், மாத்தளை கல்வி வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இணைப்பாளருமான எம்.ஆர்.யூ.ரில்வான் தெரிவித்தார். பெற்றோர்கள் மாணவர்களுக்கு தோல்வி மனப்பான்மை ஏற்படாத வண்ணம் நடந்துகொள்ளவேண்டியது கட்டாயமெனவும் உளவளத்துறை ஆலோசகர் எம்.ஆர்.யூ.ரில்வான் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 16:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க