திடீரென மாயமான நடிகை தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது
Related Articles
பல மாதங்களாக மயமாகி இருந்த பிரபல சீன நடிகை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பல மாதங்களாக திடீரென அவரை காணவில்லை என்ற செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில் வர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர். இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அதாவது ரூ.950 கோடி அபராதம் விதித்தது. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர். சீனாவில் வருமான வரி செலுத்தாதவர்கள் இது போன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.