Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொள்ளையடித்தவர்கள் நாட்டுப்பற்று பற்றி பேசுவது நகைப்புக்குரியது-பா.உ. அனுரகுமார

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 17:02

கொள்ளையடித்தவர்கள் நாட்டுப்பற்று பற்றி பேசுவது நகைப்புக்குரியது-பா.உ. அனுரகுமார

அன்று நாட்டு பற்று எனும் போர்வையில் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் தற்போது தேசப்பற்று தொடர்பாக பேசுவது நகைப்புக்குரியதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டு பற்றாளர்கள் என்பவர்கள் யார்?கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களே தேசப்பற்றாளர்கள் என சொல்லிக் கொள்கின்றனர். எந்த நாட்டில் தேசப்பற்றாளர்கள் மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றனர். விமல் வீரவன்ச தேசப்பற்றாளரா? சொல்லவே வெட்கம். அவர் உறவினர்களுக்கு வீடுகளை விநியோகிக்கும் உறவுப்பற்றாளர். அவர் தேசப்பற்றாளர் அல்ல. தனது தம்பி, தம்பியின் மனைவி, அண்ணன், அண்ணனின் மனைவி ஆகியோருக்கு வாகனம் கொடுப்பவர் தேசப்பற்றாளரா? அவர் வாகன பற்றாளர். மகிந்த ராஜபக்ஷ சீன கம்பனியிடமிருந்து 111 கோடி ரூபாவை பெற்றது அம்பலமாகி வருகின்றது. வேறு நாடுகளின் அரச தலைவர் ஒருவர் வெளிநாட்டு கம்பனிகளில் இலஞ்சம் பெற்று நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வந்தால் அவருக்கு அரசியல் மட்டுமல்லாமல் உலகில் வாழும் அருகதை இல்லாமல் போகும். 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ சதாதாரண மனிதராக ஆட்சியை பொறுப்பேற்றார். 2015 ஆம் ஆண்டு அவர் பதவி விலகும் போது மாபெரும் திருடனாக மாறினார் என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 17:02
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க