Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இப்படியொரு கடத்தல் சம்பவமா?

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 16:41

இப்படியொரு கடத்தல் சம்பவமா?

17 வயதுடைய யுவதியொருவர் இன்று அதிகாலை கடத்திச்செல்லப்பட்ட சம்பவமொன்று அம்பலாந்தோட்டை வலேவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த கடத்தல் தொடர்பாக கடத்தப்பட்ட யுவதியின் பெற்றோர்கள் அம்லாந்தோட்டை பொலிஸில் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

”வீட்டுக்குள் இன்று அதிகாலை 6 பேர் கொண்ட குழு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்து யுவதியின் சகோதரியை தாக்கி விட்டு தனது மகளை கடத்திச்சென்றனர்” என முறைப்பாடு செய்துள்ளனர்.

யுவதியை கடத்திய இனந்தெரியாத கும்பல் வீட்டுக்குள் வந்து கதவுக்கு வெடி வைத்துவிட்டு கடத்திச் சென்றுள்ளனர்.இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 16:41
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க