fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடத்திட்டத்தை ஆறாக குறைக்க நடவடிக்கை-அமைச்சர் அகில

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 14:35

பாடத்திட்டத்தை ஆறாக குறைக்க நடவடிக்கை-அமைச்சர் அகில

பாடசாலை பாடத்திட்டத்தை ஆறாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கோடு புதிய திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். தற்போது பாடத்திட்டங்களையும் மாற்றியமைக்கவுள்ளோம். 9 பாடங்களை 6 ஆக குறைக்கவுள்ளோம். இது தொடர்பில் கல்வி துறை சார்ந்தோர் கவனம் செலுத்தியுள்ளனர். சில பாடங்களில் இருக்கின்ற பாடபரப்புக்களை ஓராண்டுக்குள் ஆசிரியர்களினால் பூர்த்தி செய்ய மு:டி;யாதுள்ளது. தேவையற்றவற்றை நீக்கி விட்டு அதிக சுமையினை மாணவர்களுக்கு கொடுக்காமல் இலகுவான முறையில் கல்வியை தொடர நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

மத்துகம ஸ்ரீ டப்ள்யு டப்ள்யு டப்ள்யு கன்னங்கர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் விதானவின் நிதியொதுக்கீட்டில் இந்நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டது. ராஜாங்க அமைச்சர் அஜீத் பீ பெரேராவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க