அன்று பொருளாதரம் பற்றி வாசு சொன்ன கதை
Related Articles
முன்னாள் ஜனாதிபதிக்கு கூட நாட்டில் பொருளாதார ஸ்தீர தன்மையை ஏற்படுத்த முடியாது போனதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பொருளாதார நெருக்கடி எப்படி வந்தது? மகிந்த ராஜபக்ஷவினால் கூட இதனை நிவர்த்திக்க முடியாமல் போனது. அவரால் சிறிய மாற்றத்தை மாத்திரமே ஏற்படுத்த முடிந்தது. கொள்கைகள் காரணமாக இந்நாட்டினுடைய பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. இதில் காணப்படுகின்ற சூத்திரம் என்ன? அனைத்தையும் இலகுவாக்குவோம். இறக்குமதியை இலகுப்படுத்துவோம். இந்நாட்டிலிருந்து பணம் செல்வதை இலகுப்படுத்துவோம். இவ்வாறு இலகுப்படுத்துமாறு கூறியதன் பின்னர் அதிக இலாபம் கிடைக்குமென கூறினார்கள். ஆனால் நட்டமே ஏற்பட்டது. இது அதிகரிக்க அதிகரிக்க பொருளாதார நெருக்கடியாக தற்போது மாறியுள்ளது என தெரிவித்தார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment