மூன்று மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் இவ்வாண்டு நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைகிறது. அதற்கமைய குறித்த மூன்று மாகாணசபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த வருடத்திலும் மேலும் 3 மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதம் நிறைவு
படிக்க 0 நிமிடங்கள்