சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று வெலிமடையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வெலிமடை பொரகஸ் பதியிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
70 வயதுடைய பெண்ணே இவ்வாறு சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளார்.பொலிஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.