ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார். 0

🕔19:00, 31.அக் 2018

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். நாட்டில்

Read Full Article
மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு 0

🕔18:52, 31.அக் 2018

மத்திய மலை நாட்டில் பெய்யும்  கடுமையான மழை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை  நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்  65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக  பொதுமக்கள் தொடர்பு  அதிகாரி பி.ஜி. தயானந்த தெரிவித்தார். எதிர்காலத்தில் நீர்த்தேக்கத்தின்  நீர்மட்டத்தின் அளவை  கருத்தில் கொண்டு நாற்பத்தைந்து ஆயிரம் ஏக்கர் நெல்

Read Full Article
மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்க கூடும்

மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்க கூடும் 0

🕔15:37, 31.அக் 2018

தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய

Read Full Article
ஐ.நா. அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதி நியமனம்

ஐ.நா. அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதி நியமனம் 0

🕔15:34, 31.அக் 2018

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதியாக கயர் பெதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். கயர் பெதர்ஷன் தற்போது சீனாவுக்கான நோர்வே தூதுவராக செயற்பட்டு வருகிறார். அவரை சிரியாவுக்கான ஐ.நா பிரதிநிதியாக தெரிவுசெய்ய பாதுகாப்பு சபையின் ஐவரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சிரிய மக்களின் ஜனநாயகம்

Read Full Article
ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔15:20, 31.அக் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்றையதினம் இடம்பெறலாமென சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

Read Full Article
அடிமட்டத்திலுள்ள ஆதரவாளர்களை பாதுகாக்க ஐ.தே.கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை

அடிமட்டத்திலுள்ள ஆதரவாளர்களை பாதுகாக்க ஐ.தே.கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை 0

🕔15:11, 31.அக் 2018

அடிமட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பதற்கு கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லையென அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இக்கட்சி ஒவ்வொரு முறையும் தோல்வியடைவதற்கு இதுவே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read Full Article
உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் திறந்துவைப்பு

உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் திறந்துவைப்பு 0

🕔13:25, 31.அக் 2018

உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் இந்தியாவில் திறந்து வைக்கப்படவுள்ளது. சிலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாயின் உருவத்தை வடிவமைத்தே சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிலையானது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைக்கருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை ஒருங்கிணைக்க

Read Full Article
யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்தவும் : அமெரிக்கா

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்தவும் : அமெரிக்கா 0

🕔13:16, 31.அக் 2018

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பாம்பியோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கவனம் செலுத்துமாறு அரபுநாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யெமனில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் யேமனில் மேற்கொள்ளப்பட்டு வரும்

Read Full Article
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார் 0

🕔11:46, 31.அக் 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதுதொடர்பான நிகழ்வு நிதியமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள நிதியமைச்சு பாரிய சேவையினை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக தெரிவித்தார். 2005ம் ஆண்டு இறுதியிலிருந்து 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி வரை நீண்டகாலமாக குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரென்ற

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது 0

🕔11:29, 31.அக் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை மற்றும் கல்கிசை பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கல்கிசை யஷோராபுர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து இரண்டு கிராம் 200 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்களை இன்று கல்கிசை மற்றும் மாளிகாகந்த

Read Full Article

Default