சர்வதேசத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்-பிரதி அமைச்சர் ஹர்ச
Related Articles
ரூபாவின் பெறுமதியை பாதுகாப்பதற்கு உள்ளுர் கைத்தொழில் துறையை பலப்படுத்த வேண்டுமென பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கூறினார்.
ஏற்றுமதிகளை அதிகரித்து சர்வதேசத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இடம்பெறாவிடின் இறக்குமதியை வரையறுக்க வேண்டி ஏற்படும். உள்ளுர் கைத்தொழில் துறை மற்றும் உள்ளுர் சேவைகளை பலப்படுத்துவதன் மூலமே ரூபாவின் பெறுமதியைதக்க வைத்துக் கொள்ள முடியும். உள்ளுர் உற்பத்திகளையும் உள்ளுர் சேவைகளையும் விஸ்தரிப்பதற்கு உள்ளுர் சந்தை வாய்ப்புக்களை விரிவாக்க வேண்டும். சந்தை வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு இந்தியா, சீனா, பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனும் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்;. அவ்வாறில்லாமல் தற்காலிக தீர்வுகளினால் எதனை எட்ட முடியாது. அதன் ஊடாக ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியை குறுகிய காலத்திற்கேனும் வரையறுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் பேதமின்றி நாட்டுக்காக அனைவரும் ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன் என மேலும் குறிப்பிட்டார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment